காவேரிப்பாக்கம் அருகே அங்கன்வாடி கட்டிடம் திறப்பு!

அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா!;

Update: 2025-03-08 04:29 GMT
காவேரிப்பாக்கம் ஒன்றியம், பெருவளையம் ஊராட்சியில் இருந்த அங்கன்வாடி கட்டிடம் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதையடுத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் சி.எஸ்.கே.குமரேசன் தலைமை தாங்கி அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார். பின்னர் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News