குமரி : நடுரோட்டில் வியாபாரியை தாக்கி கொலை செய்து எரிப்பு

நாகர்கோவில்;

Update: 2025-03-08 10:26 GMT
நாகர்கோவில் இந்து கல்லூரி அருகே கவிமணி நகர் என்ற பகுதி உள்ளது. இது அதிக வீடுகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள பாண்டியன் வீதியில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக கிடந்தார். அவரது கால் துண்டாகி ரோட்டோரத்தில் கிடந்தது. சடலத்தின் அருகே பைக் ஒன்று எரிந்து கிடந்தது. காலையில் அந்த பகுதி வழியாக சென்ற சிலர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கோட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.      உடனடியாக ஏஎஸ்பி லலித்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது சென்றனர். மேலும் இது குறித்து அறிந்ததும் குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலினும் அதிரடிப்படையுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.  இறந்து கிடந்தவரின் உடல் அருகே காங்கிரீட் கல்  ஒன்று கிடந்தது. அவரது தலையிலும் பலத்த காயம் இருந்தது. எனவே காங்கிரீட் கல்லை போட்டு கொன்று விட்டு அதன் பின்னர் உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். மற்றும் முகம் கருகிய நிலையில் கிடந்தது.         அவரது பைக்கில் உள்ள பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்த போது கொலை செய்யப்பட்டு கிடந்தவர் நாகர்கோவில் வடலி விளை பகுதியைச் சேர்ந்த குமரேசன் மகன் வேலூ (46) என்பது தெரிய வந்தது. இவர் கவிமணி நகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். வழக்கமாக இரவு 11 மணிக்கு கடையை பூட்டி விட்டு பைக்கில் வீட்டிற்கு செல்வது  வழக்கம். அதே போல் நேற்று இரவும் கடையை பூட்டி வீட்டிற்கு புறப்பட்டபோது, ஒரு கும்பல் அவரை .மடக்கி கீழே தள்ளி கல்லால் தாக்கி கொலை செய்து விட்டு உடலை எரித்தது தெரிய வந்தது.        இந்த கொலைக்கான காரணம் என்பது என்ன என்பது உறுதியாக தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. குற்றவாளிகள் எத்தனை பேர்?  கொலைக்கான காரணம் என்ன?  என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News