பஸ் ஏறும் போது செல்போன் திருட்டு

மார்த்தாண்டம்;

Update: 2025-03-08 12:22 GMT
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே கோணத்து விளை என்ற பகுதியை சேர்ந்தவர் சந்திர பிள்ளை (68).  வியாபாரியான  இவர் நேற்று மார்த்தாண்டம் சென்றார். பின்னர் குலசேகரம்  செல்வதற்காக மார்த்தாண்டம் காந்தி மைதான பஸ் நிறுத்தத்தில் நின்றுள்ளார். அப்போது பஸ் வந்ததும், பஸ் ஏற முயன்றுள்ளார். அந்த நேரத்தில் சந்திர பிள்ளை வைத்திருந்த செல்போனை மர்ம நபர் ஒருவர்  நைசாக திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து சந்திர பிள்ளை மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போனை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Similar News