கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி செல்வதற்காக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 "குளு குளு' வசதி கொண்ட சொகுசு படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த அதிநவீன 2 சொகுசு படகுகளும் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.8 கோடி செலவில் வாங்கப்பட்டது. இதில் திருவள்ளுவர் படகில் உள்ள 150 இருக்கைகளில் 19 இருக்கைகள் "குளு குளு" வசதி கொண்டவை மீதி உள்ள 131 இருக்கைகள் சாதாரணவை ஆகும். தாமிரபரணி படகில் உள்ள 75 இருக்கைகளும் " குளுகுளு' வசதி கொண்டவை ஆகும். "குளுகுளு" அறை வசதி கொண்ட படகில் பயணம் செய்வதற்கு நபர் ஒன்றுக்கு ரூ.450 வீதமும் சாதாரண படகில் பயணம் செய்வதற்கு நபர் ஒன்றுக்கு ரூ.350 வீதம் கட்டணம் வசூலிக்கப்படு கிறது. இந்த அதிநவீன சொகுசு படகு வாங்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் திருவள்ளுவர் என்ற சொகுசு படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் சின்னமுட்டம் துறை முகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள படகு கட்டும் தளத்தில் கரை ஏற்றப்பட்டு சீரமைக்கும் பணி இரவு பகலாக தீவிரமாக நடந்து வருகிறது.