நாகர்கோவிலில் காதலியுடன் சென்ற வாலிபர் மீது தாக்குதல்
4 பேர் மீது வழக்கு;
குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் (20 ). தற்போது நாகர்கோவில் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று அபிலாஷ் தான் காதலித்து வரும் பொன் ஒருவருடன் பைக்கில் இறச்சகுளம் அமிர்தா கல்லூரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பூதப்பாண்டி பகுதியை சேர்ந்த அஜித் ( 21), அழகிய பாண்டிபுரம் கபில் (26), இறச்சகுளம் ரெஜின் (24,சுஜின் (24) ஆகியோர் வழிமறித்து தகராறு செய்துள்ளனர். அந்தப் பெண்ணை இறக்கிவிட்டு செல்லுமாறு கூறியுள்ளனர். அதற்கு அபிலாஷ் மறுத்துள்ளார். அப்போது அவரை சரமரியாக தாக்கி பைக் சாவியால் கண்ணில் குத்தினர். இதற்கிடையே அந்த வழியாக வாகனத்தில் பொதுமக்கள் வந்ததால் அந்த கும்பல் காதல் ஜோடியை மிரட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். இது குறித்து அபிலாஷ் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அபிலாஷ் உடன் வந்த இளம் பெண்ணை அஜித் என்பவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையில் மோதல் நடந்ததாக போலீஸ் தரப்பில் கூறிப்படுகிறது. போலீசார் நான்கு பேரை தேடி வருகிறார்கள்.