ராமநாதபுரம் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது

ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைப்பெற்றது;

Update: 2025-03-09 01:49 GMT
ராமநாதபுரத்தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடைப்பெற்றது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்திரவின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி, .மெஹ்பூப் அலிகான். தலைமை வகித்தார், மற்றும் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி கே. கவிதா, சார்பு நீதிபதி எம். அகிலா தேவி, செயலாளர்/சார்புநீதிபதி எஸ். பிரசாத், நீதித்துறை நடுவர் எண் -1 என்.நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர் எண்-II ஜி.பிரபாகரன் மற்றும் கூடுதல் மகிளா நீதிபதி இ.வெர்ஜின் வெஸ்டா மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.கேத்திரினி ஜெபா சகுந்தலா வழக்கறிஞர் சங்க துணைத் தலைவர் என்.மாதவன் மற்றும் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கு தரப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக மாவட்ட நீதிமன்ற வளாகம் மற்றும் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, திருவாடாணை, இராமேஸ்வரம், ஆகிய இடங்களில் 10 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை சம்மந்தப்பட்ட வழக்குகள், வங்கி வாராக்கடன்கள் மற்றும் சிறு வழக்குகள் உட்பட மொத்தம் 3842 வழக்குகள் பரிசீலினைக்கு எடுக்கப்பட்டு அதில் 1295 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.8,47,23,996/- நிவாரண தொகை வழங்கப்பட்டது.

Similar News