திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில்

அதிமுக சார்பில் பூத் கிளை அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம்;

Update: 2025-03-09 05:34 GMT
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில், அதிமுக சார்பில் பூத் கிளை அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி தலைவர் ராம்சந்தர் முன்னிலை வகித்தார். எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பால்ராஜ் கலந்து கொண்டு, கூட்டத்தின் நோக்கம் குறித்தும், பொறுப்பாளர்களின் பணிகள் குறித்தும் பேசினார். கூட்டத்தில், ஊராட்சிகள்தோறும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைக்க பாடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், மாணவரணி மாவட்ட செயலாளர் விக்னேஷ், ஜெயலலிதா பேரவை மாவட்ட துணை செயலாளர் ரகுபதி மற்றும் கட்சியின் மா வட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், பனங்குடி பொறுப்பாளர் சத்யா நன்றி கூறினார்.

Similar News