ராமநாதபுரம் வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
உச்சிப்புளியில் வீட்டின் கதவை உடைத்து பணம் கொள்ளை: வீடு முழுவதும் மிளகாய் பொடியை வீசிவிட்டுச் திருடர்கள்;
ராமநாதபுரம் அடுத்த உச்சிப்புளி ரயில்வே கேட் அருகே உள்ள வீட்டில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.10 ஆயிரத்து திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீஸ் மற்றும் மோப்ப நாயை திசை திருப்புவதற்காக வீடு முழுவதும் மர்ம நபர்கள் மிளகாய் பொடியை வீசி சென்றுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (57).இவர் வெளிநாட்டில் வேலை செய்து தற்போது சொந்த ஊரில் வசித்து வருகிறார். இவரது மனைவி நேற்று திருவாரூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டதால் இவர் நேற்று இரவு உச்சிப்புளியில் உள்ள அவரது மகள் வீட்டிற்கு சென்று தங்கி விட்டு இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சதீஷ்குமார் உடனடியாக உச்சிப்புளி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்த கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் முன் வாசலில் உள்ள கதவை இரும்புகம்பியால் உடைத்து வீட்டின் உள் அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்து பணம் ரூபாய் 10 ஆயிரத்து திருடி சென்றுள்ளனர். சதீஷ்குமாரின் மனைவி திருமணத்திற்கு சென்றதால் அவர் நகளைகள் அணிந்து சென்றதாலும், ஒரு சில நகைகள் அவரது மகள் வீட்டில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக நகைகள் மர்ம நபர்களிடம் இருந்து தப்பியது. பணத்தை திருடிய மர்ம நபர்கள் போலீஸ் மற்றும் மோப்ப நாயை திசை திருப்புவதற்காக வீடு முழுவதும் மிளகாய் பொடியை வீசி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த உச்சப்புளி போலீசார் கைரேகை நிபுணர்கள சதீஷ்குமார் வீட்டில் சாய்ந்த பொடியை தூவி சோதனை செய்து வருகின்றனர். மேலும் இத்திருட்டு சம்பவம் தொடர்பாக சதீஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.