மக்களவைத் தொகுதி சீரமைப்பு குறித்து பேசுவது தேவையற்றது அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன்
கலவை தொகுதி சீரமைப்பு குறித்து பேசுவது தேவையற்றது அதிமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியில் தெரிவித்தார்.;
அரியலூர், மார்ச்.9- அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற அக்கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருமொழி கொள்கையை ஏற்றுக் கொண்டு மக்கள் இருந்து வருகின்றனர். மாநில அரசின் செயல்பாடு சரியாக இல்லாததால் குற்றங்கள் நிறைய நடைபெறுகிறது. போதையினால் கொலை, கொள்கைகள் அதிகம் நடக்கிறது. இதனை கட்டுப்படுத்த முடியாத, சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியாத தமிழக அரசு, அதனை திசை திருப்பவே மும்மொழி கொள்கையை கையில் எடுத்துக்கொண்டு, ஹிந்தியை மத்திய அரசு வேண்டுமென்றே திணிப்பதாக தவறுதலாக மக்களிடம் மாநில அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. சிபிஎஸ்சி பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுகிறது. ஆனால், மாநில அரசால் நடத்தப்படும் அரசு பள்ளிகளில் இருமொழி கொள்கை பின்பற்றப்படுகிறது. இருமொழிக்கொள்கை தான் சரி எனும் பட்சத்தில் மத்திய அரசின் பள்ளிகள், மெட்ரிக்குலேசன் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இரு மொழி கொள்கை மட்டுமே பிற்பற்ற வேண்டும் எனவும், மும்மொழி கொள்கையை தடைசெய்ய வேண்டும் என சொல்ல திரானி இல்லாமல் சாலையில் நின்று கத்திக்கொண்டு உள்ளனர். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு தமிழக அரசு சிறப்பாக செயல்பட வேண்டும். மக்களவைத் தொகுதி சீரமைப்பு குறித்து பிரதமர் எந்தவித அறிவிப்பும் அறிவிக்காத நிலையில், இவர்களாக ஏதேதோ தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். மக்களவைத் தொகுதி சீரமைப்பில் மத்திய அரசு எந்த முடிவும் அறிவிக்காதநிலையில் அது குறித்து பேசுவது தேவையற்றது என்றார்.