காவல்துறை சார்பில் எச்சரிக்கை பேனர் அமைப்பு

மது அருந்தும் நபர்களை கண்டிக்கும் வகையில் எச்சரிக்கை பேனர் இன்று அமைக்கப்பட்டது;

Update: 2025-03-10 13:38 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஈரோட்டை இணைக்கும் வகையில் காவிரி ஆறு ஓடுகிறது. சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் முக்கிய குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறு உள்ளது. இந்நிலையில் காவிரி கரை ஓரங்களில் மாலை நேரங்களில் அத்துமீறி நுழையும் மர்ம நபர்கள், மது அருந்துவது, மது பாட்டில்களை காவிரி ஆற்று கரையோரம் உடைத்துச் செல்வது போன்ற செயல்பாடுகளை செய்து வருகின்றனர். இதன் காரணமாக இரவு உள்ள நேர செல்லும் பொதுமக்கள் பெண்கள் அச்சத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.தொடர்ந்து வெளிப்பகுதியில் இருந்து பல்வேறு நபர்கள் குழுக்களாக வந்து மது அருந்தி செல்வதால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் திங்களன்று பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட நான்காவது வார்டு காவிரி பகுதியின் பல்வேறு இடங்களில் எச்சரிக்கை அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டது. காவிரி கரையோர பகுதிகளில் மது அருந்து நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த பேனரில் குறிப்பிடப்பட்டுள்ளது..

Similar News