கோவை: ஹோட்டல் ஊழியர் கொலை - சக ஊழியர் கைது !

ஹோட்டல் ஊழியர் கொலை வழக்கில் சக ஊழியரே கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2025-03-11 06:27 GMT
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள வழியாம்பாளையம் பகுதியில் கடந்த 02.03.2025 அன்று இரவு ஹோட்டல் ஊழியர் ராமன் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ராமனுடன் வேலை செய்த சங்கர் என்ற சண்முகராஜ் (25) கொலை செய்தது தெரியவந்தது. சங்கர் என்ற சண்முகராஜை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையின்போது, போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற சங்கர், கவுசிகா பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சங்கர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News