கொட்டும் மழையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்;
நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் நெல்லை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு கொட்டும் மழையிலும் உரிமை குரல் ஓட்டுநர் சங்கத்தினர் தங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொட்டும் மழையில் நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.