மர சிற்பத்தில் சிறந்து விளங்கும் அரும்பாவூர்
தெய்வ சிற்பங்கள், தேர்கள், சப்பரங்கள், தெய்வ வாகனங்கள்,;
பெரம்பலூர் மர சிற்பத்தில் சிறந்து விளங்கும் அரும்பாவூர் பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர், தழுதாழை ஆகிய பகுதிகளில் அழகிய மர சிற்பங்கள் செய்யப்படுகின்றன. தெய்வ சிற்பங்கள், தேர்கள், சப்பரங்கள், தெய்வ வாகனங்கள், அலங்கார வேலைப்பாடுகள் அமைந்த அறை கலன்கள், நிலைக்கதவுகள், பூஜை அறைகள் ஆகியவற்றைக் குறைந்த விலையில் நேர்த்தியாக வடிவமைக்கின்றனர். வாய்ப்பிருந்தால் சென்று பாருங்கள். இனிய அனுபவமாய் இருக்கும்.