திமிரி: பள்ளியில் உலக மகளிர் தின விழா

பள்ளியில் உலக மகளிர் தின விழா;

Update: 2025-03-12 04:24 GMT
திமிரியை அடுத்த பரதராமி தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தி கிரிசர் அகாடமி சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ. பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக டாக்டர் அபர்ணா கலந்து கொண்டார். விழாவில் பள்ளியின் நிறுவனர் கே.கே.ராஜன், இயக்குனர் சரோஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாளாளர் சிந்து ராஜன் ஆகியோர் பங்கேற்றனர். சாதனைகள் படைத்த 60-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கல்வி மற்றும் தொழிலில் சிறந்த இடத்தை பிடித்த பெண்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி சார்பில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

Similar News