நடுரோட்டில் ரகளை செய்த வாலிபர் கைது

மார்த்தாண்டம்;

Update: 2025-03-12 12:49 GMT
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குன்னம்பாறை சந்திப்பு பகுதியில் நேற்று இரவு ஒரு வாலிபர் சாலையில் நின்று ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரம் சாலையில் நடந்து செல்லும் பொது மக்களை வம்பு இழுத்து தகராறு செய்தார்.  இது குறித்து உடனடியாக அப்பகுதியினர் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அப்போது போலீசார் அந்த வாலிபர் விசாரணை நடத்தினர்.        ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அந்த வாலிபர் மீண்டும் போலீசாரிடமே வம்பிழுத்துள்ளார். இதனை அடுத்து அவரை குண்டு கட்டாக தூக்கி சென்ற போலீசார்  மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.        விசாரணையில் அவர் காட்டாத்துறை அருகே  ஆலன் விளை என்ற பகுதியை சேர்ந்த டேவிட் (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து டேவிட்டை கைது செய்த போலீசார் அவர் குடிபோதையில் ரகளை செய்தாரா?  என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News