கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
மதுரையில் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.;
மதுரை மாநகர செல்லூர் காவல் நிலையத்தில் 2017 ம் வருடம் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மதுரை புது விளாங்குடி பகுதியைச் சேர்ந்த விருமாண்டி என்பவரின் மகன் சச்சிதானந்தம் (40) என்பவரை கொலை செய்தது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மகன் பூமிநாதன்( 43) என்பவர் மீது செல்லூர் காவல் நிலைய குற்ற எண்.99/2017 u/s 302 IPC என வழக்கு பதிவு செய்யப்பட்டு பூமிநாதன் என்பவரை கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு இவ்வழக்கின் சாட்சிகள் விசாரணை மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று 12.03.2025 சாட்சிகள் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கிய மதுரை மாவட்ட நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் வழக்கின் எதிரி பூமிநாதன் என்பவர் மீதான குற்றச்சாட்டு சாட்சிகள் விசாரணையில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணம் ஆனதால் எதிரியை குற்றவாளி என தீர்ப்பளித்து கொலை குற்றத்திற்கு தண்டனையாக கடுங்காவல் ஆயுள் தண்டனையும் ரூ.10,000/- அபராதமும் விதித்தும் அபராதம் கட்ட தவறினால் ஆறு மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார்.