ஜெயங்கொண்டத்தில் புதிய நகர பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
ஜெயங்கொண்டத்தில் புதிய நகர பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.;
அரியலூர், மார்ச்13- ஜெயங்கொண்டத்திலிருந்து காடுவெட்டி, அணைக்கரை, சுத்தமல்லி, ஆர்.எஸ். மாத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு மகளிர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டது . ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் சார்பில் ஜெயங்கொண்டத்திலிருந்து காடுவெட்டி, அணைக்கரை, சுத்தமல்லி, ஆர்.எஸ். மாத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு மகளிர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 4 புதிய மகளிர் விடியல் பயண நகர பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் ,அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி, ஜெயங்கொண்டம் தாசில்தார் சம்பத், திமுக சட்டதிட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், நகர் மன்ற தலைவர் சுமதிசிவகுமார், திமுக நகர செயலாளரும், நகர் மன்ற துணைத் தலைவருமான வெ.கொ.கருணாநிதி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.