ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்

நிறுத்தம்;

Update: 2025-03-14 02:52 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், அலுவலகங்கள் வெறிச்சோடின.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் உள்ளிட்ட விடுபட்ட உரிமைகளை வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் உள்ள, 217 அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News