குமரி மருத்துவக் கல்லூரியில் விழிப்புணர்வு ஊர்வலம்

கலெக்டர் துவக்கினார்;

Update: 2025-03-14 14:20 GMT
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் கண்ணீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வார விழாவை ஒட்டி கண்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை நடைபெற்றது. கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி வளரத்தில் நடந்த இந்த ஊர்வலத்தை கலெக்டர் அழகுமீனா தொடங்கி வைத்தார்.       மேலும் மருத்துவ கல்லூரியில் கண் மருத்துவமனை பிரிவில் ஆப்டிக்கல் டெமோகிராஃபி என்ற இயந்திரத்தை கலெக்டர் இயக்கி வைத்தார். இது கண் பராமரிப்புக்கு மிகவும் உதவியாக இருக்கும். கண்ணின் பின்புறத்தில் இருந்து பார்வை திறன் பரிசோதிக்கப்படும் என டாக்டர்கள் கூறினர்.       இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ராமலட்சுமி, உறைவிட மருத்துவர் டாக்டர் ஜோசப் உட்பட கல்லூரி டாக்டர்கள், செவிலியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News