தமிழக வெற்றி கழகத்தில் பொறுப்பு அளிப்பதற்கு பணம் ஆடியோ வைரல்

தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்டம் ஒன்றிய அளவில் பொறுப்புகள் அளிப்பதற்கு மாவட்ட நிர்வாகி பிரகாசம் என்கின்ற குட்டி பணம் பெற்றும் மீதித் தொகையை யார் கணக்கிற்கு அனுப்புவது என குட்டியுடன் இருக்கும் நவீன் குமாரிடம் சஞ்சய் பேசும் ஆடியோ வைரலாகி சர்ச்சை;

Update: 2025-03-14 16:05 GMT
திருவள்ளூர் தெற்கு மாவட்டத்திற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்டம் ஒன்றிய அளவில் பொறுப்புகள் அளிப்பதற்கு மாவட்ட நிர்வாகி பிரகாசம் என்கின்ற குட்டி பணம் பெற்றும் மீதித் தொகையை யார் கணக்கிற்கு அனுப்புவது என குட்டியுடன் இருக்கும் நவீன் குமாரிடம் சஞ்சய் பேசும் ஆடியோ வைரலாகி சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றி கழகம் சார்பில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் நாளை காலை 10 மணிக்கு அறிவிக்க இருக்கிறார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சியில் பொறுப்புகள் நியமிப்பதற்கு யாரிடமும் பணம் பெறக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் திருவள்ளூர் தெற்கு மாவட்டத்தில் மாவட்டச் செயலாளர் பிரகாசம் என்கின்ற குட்டி மாவட்ட இணைச் செயலாளர் பதவிக்கு .5 லட்சமும் மாவட்ட பொருளாளர் பதவிக்கு 3 லட்சமும் மாவட்ட துணைச் செயலாளர் பதவிக்கு 2 லட்சமும் செயற்குழு உறுப்பினர்களுக்கு தலா 80 ஆயிரம் ரூபாய் என அவருடன் இருக்கும் நவீன் குமார் என்பவரை வைத்து வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதில் கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் த.வெ.க. கட்சி நிர்வாகி ஒருவருக்கு செயற்குழு உறுப்பினர் பதவி அளிக்க 80 ஆயிரம் ரூபாய் பேசி அதில் ஏற்கனவே 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாயை எப்படி வழங்குவது குட்டி அண்ணனுக்கு அனுப்பி விடவா அல்லது உங்களுக்கே அனுப்பவா என சஞ்சய் கேட்க அதற்கு நவீன் குமார் சிறிது நேரம் பொறுங்கள் குட்டி இடம் கேட்டு சொல்கிறேன் பிறகு அனுப்பி வையுங்கள் எனவும் அதற்கு சஞ்சய் நாளை பொறுப்புகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில் குட்டி அண்ணனிடம் சொல்லுங்கள் பொறுப்பு இல்லையென்றால் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டது வீண் என பேசும் ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதேபோல் திருவள்ளூர் பகுதியில் வினோத் என்கின்ற நிர்வாகியை பணம் கேட்டு தர மறுத்ததால் அவர் மிரட்டியதாக அவருடைய அம்மா மகளிர் அணியினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாவட்ட நிர்வாகி குட்டியை திட்டும் ஆடியோவும் வைரலாகி திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Similar News