பள்ளியாடியில் நாளை புகழ்பெற்ற சர்வ மத பிரார்த்தனை

கன்னியாகுமரி;

Update: 2025-03-15 03:32 GMT
குமரி மாவட்டம்  வாள்வச்ச கோஷ்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளியாடி பகுதியில் பழைய பள்ளி அப்பா திருத்தலம் ஒன்று உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த புளிய மரத்தின் அருகில் உள்ள இந்த திருத்தலம் மும்மத அடையாளங்கள் உடன் அமைக்கப்பட்டுள்ள திருத்தலமாகும். இங்கு இந்துக்கள் விளக்கேற்றி,  கிறிஸ்தவர்கள் மெழுகுவார்த்தி ஏற்றியும், முஸ்லிம்கள் தூபம் காட்டி அவரவர் முறைப்படி வணங்குகின்றனர்.        மும்மதப் பிரார்த்தனை தலமாகவும் சமய நல்லிணக்க தலமாகவும்  இந்த பள்ளி தலம் உள்ளது.  ஆண்டுதோறும் மார்ச் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சர்வ மத பிரார்த்தனை அடுத்த நாள் சமய பந்தி விருந்து நடைபெற்று வருவது வழக்கம்.        இந்த நிலையில் இந்த ஆண்டு நாளை 16ஆம் தேதி சர்வ மத பிரார்த்தனை, 17ஆம் தேதி திங்கள் கிழமை சமபந்தி விழுந்தும் நடைபெறுகிறது. சமபந்தி மற்றும் சர்வ மத பிரார்த்தனைக்கான ஏற்பாடுகளை பள்ளி அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்

Similar News