பணியாளர் குறைகேட்புக் கூட்டம்

கூட்டம்;

Update: 2025-03-15 04:32 GMT
கள்ளக்குறிச்சி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில், பணியாளர் குறைகேட்புக் கூட்டம் நடந்தது.மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார் சரக துணைப் பதிவாளர்கள் சுகந்தலதா, குறிஞ்சி மணவாளன், விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உதவி பொது மேலாளர்கணபதி, அலுவலக கண்காணிப்பாளர்கள் சாந்தி, சசிகலா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் பங்கேற்று குறைகள் தொடர்பாக மனு அளித்தனர். மொத்தம், 12 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, விதிகளுக்குட்பட்டு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News