மின்கசிவால் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தததால் பரபரப்பு

சாலையில் சென்று கொண்டிருந்தபோது 40 அடி கண்டெய்னர் லாரி மின்கசிவால் திடீரென தீப்பிடித்து எரிந்தததால் பரபரப்பு;

Update: 2025-03-15 14:51 GMT
ஆவடி காட்டூர் எஸ்டேட் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தபோது 40 அடி கண்டெய்னர் லாரி மின்கசிவால் திடீரென தீப்பிடித்து எரிந்தததால் பரபரப்பு ஸ்ரீ பச்சையம்மன் டிரான்ஸ்போர்ட்டுக்கு சொந்தமான 40 பீட் கண்டெய்னர் லாரி பிளாஸ்டிக் ரா மெட்டீரியல் ஏற்றி இன்று அதிகாலை மீஞ்சூர் to வண்டலூர் பைபாஸ் சாலையில் துறைமுகத்திலிருந்து காட்டூர் சிப்காட் அருகில் வந்தபோது.லாரியில் இன்ஜின் பகுதியில் திடீரென தீப்பிடித்தது இதனை சுதாரித்துக் கொண்ட லாரி ஓட்டுநர். லாரியை அசர அவசரமாக சாலையில் நிறுத்திவிட்டு இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார்.சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இந்த தீ விபத்தில் சுமார் 7 லட்சம் மதிப்புடைய லாரி எஞ்சின் பகுதி முற்றிலுமாக எரிந்து சேதம் ஏற்பட்டது பிளாஸ்டிக் மெட்டீரியல் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி பெட்டியில் எந்தவிதமான தீ விபத்து ஏற்படாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News