
பி.எம்., இண்டர்ஷிப் திட்டம் மூலம் வழங்கப்படும் இண்டர்ஷிப் பயிற்சிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: பி.எம்., இண்டர்ஷிப் திட்டம் மூலம் ஐந்தாண்டுகளில் சிறந்த 500 நிறுவனங்களில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இண்டர்ஷிப் பயிற்சி வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் 1.25 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்குவதை இலக்காக கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. 21 முதல் 24 வயதுக்குட்பட்ட நபர்கள் 12 மாத கால பயிற்சியில் சேரலாம்.விண்ணப்பதாரர்கள் நேஷனல் அப்ரெண்டிஷிப் புரமோஷன் திட்டத்தில் பயற்சி பெற்றிருக்க கூடாது. இத்திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் 11 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதுதொடர்பான மேலும் விபரங்களை http://www.pminternship.mca.gov.in/ என்ற இணையமுகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் இயங்கும் அலுவலகத்திற்கு நேரில் சென்றும், 04146-294989 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.