
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரைச் சேர்ந்தவர் 45 வயது பெண். இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் சாலையில் நடந்து சென்றார். அப்போது ஒரு நபர், அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக துாக்கிச் சென்று, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். அந்த பெண் கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் திரண்டு, அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து கள்ளக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த விந்தேஷ்ராரி மகன் ஜெகதீஷ், 35; என்பதும், கனியாமூரில் தங்கி அரிசி ஆலையில் கூலி வேலை செய்வதும் தெரிந்தது. நண்பரை பார்க்க தச்சூருக்கு வந்தவர் அந்த பெண்ணிடம் அத்துமீறியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஜெகதீைஷ கைது செய்தனர்.