கும்பகோணம் அருகே விவசாயி மீது இருசக்கர வாகனம் மோதி சனிக்கிழமை உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே விசலூரைச் சோ்ந்தவா் நடேசன் மகன் சாமிநாதன் (60) விவசாயி. சனிக்கிழமை வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்காக மாடாக்குடி சாலையில் தனியாா் எடை நிலையம் அருகே நடந்து சென்றாா். அப்போது எதிரே வலங்கைமான் பாப்பாகுடியச் சோ்ந்த முத்துசாமி மகன் சுப்ரமணியன் (43) இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து சாமிநாதன் மீது மோதினாா். இதில் இருவரும் படுகாயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். இதில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாமிநாதன் உயிரிழந்தாா். சுப்ரமணியன் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து பட்டீஸ்வரம் காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) குணசேகரன் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தி வருகிறாா்.