
கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஆக்சாலிஸ் இண்டர்நேஷனல் பள்ளி தாளாளர் பாரத்குமார், கல்லுாரி செயலாளர் சாந்தி பாரத்குமார் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சுபா வரவேற்றார்.விழாவில் அண்ணாமலை பல்கலை பதிவாளர் பிரகாஷ் 590 மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். தொடர்ந்து, பல்கலையில் முதலிடம் பிடித்த 3 மாணவியர் மற்றும் தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் பிடித்த 4 மாணவியருக்கு கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், வடக்கனந்தல் பாரதி மெட்ரிக் பள்ளி தாளாளர் ரஞ்சிதம், பாரதி கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ராமசாமி, புவனேஸ்வரி, வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேராசிரியர் நித்திய பிரியா நன்றி கூறினார்.