
சின்னசேலத்தில் ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமில், ஆர்ய வைசிய வாசவி கிளப் முன்னாள் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆதிசேஷன் தலைமை தாங்கினார். வாசவி வனிதா கிளப் தலைவர் வேல்மணி, செயலாளர் பரணிகுமார், பொருளாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.முகாமை, ரோட்டரி முன்னாள் சங்க தலைவர் சுரேஷ் துவக்கி வைத்தார். கண் குறைபாடுகளுடன் பங்கேற்ற, 200 பேருக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 110 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.