குமரி :  மாப்பிள்ளை பார்ப்பது போல் வந்து தங்க நகைகள் அபேஸ்

4 பெண்கள் கைது;

Update: 2025-03-17 03:29 GMT
குமரி :  மாப்பிள்ளை பார்ப்பது போல் வந்து தங்க நகைகள் அபேஸ்
  • whatsapp icon
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியில் சேர்ந்தவர்  ராஜாராம் (58). இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். ஆறு வருடங்களுக்கு முன்பு ராஜாராமின் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இருவரும் விவாகரத்து கேட்டு நாகர்கோவில் குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு  உள்ளது.       தற்போது ராஜாராமின் தாயருக்கு உடல் நிலை சரி இல்லாததால் தயாரை கவனிக்க இரண்டாவது திருமணம் செய்ய நினைத்து ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். அதனைப் பார்த்த மதுரை சேர்ந்த முருகேஸ்வரி என்ற பெண் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்து குடும்பத்துடன் நேரில் வந்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.      இதற்காக 4 பெண்கள் வந்துள்ளார்கள்.  அப்போது ராஜாராம் அவரது மகன், மகள்கள் மற்றும் உறவினர்கள் இருந்து உள்ளனர்.  திருமண ஆலோசனை நடத்திவிட்டு இரவு 9 மணிக்கு பெண் வீட்டார் சென்று விட்டனர். மறுநாள் பார்த்தபோது நகைகளை காணவில்லை. உடனடியாக தனது பிள்ளைகளிடம் தெரிவித்துவிட்டு, முருகேஸ்வரிக்கு செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.       உடனடியாக ராஜாகமங்கலம் போலீசில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குச் செய்து மதுரையை  சேர்ந்த நான்கு பெண்களையும் பிடித்து விசாரித்த போது, அவர்கள் ராஜாராம் வீட்டில் இருந்த நகையை திருடி சென்றது தெரிய வந்தது. நான்கு பெண்களையும் கைது செய்த போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

Similar News