குப்பைகளால் சுகாதார சீர்கேடு

சீர்கேடு;

Update: 2025-03-17 03:39 GMT
குப்பைகளால் சுகாதார சீர்கேடு
  • whatsapp icon
மூங்கில்துறைப்பட்டு ஊராட்சி சார்பில் குப்பைகளை மூங்கில்துறைப்பட்டு அண்ணா நகர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் கொட்டி வருகின்றனர். அந்த குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வந்தனர். மக்காத குப்பைகளை இயந்திரம் மூலம் பொடியாக்கி வந்தனர்.இந்த இயந்திரம் அமைத்துள்ளனர். ரூபாய் 17 லட்சம் மதிப்பீட்டிலான இந்த இயந்திரம் இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் ஆறு மாதம் மட்டுமே செயல்பாட்டில் இருந்து வந்தது. பின்பு இயந்திரம் செயல்பாட்டில் இல்லாமல் வீணாகி வருகிறது. தற்போது குப்பைகளை தரம் பிரிக்காமல் ஆற்றின் கரையோரம் கொட்டி வருகின்றனர். இதனால் குப்பைகளிலிருந்து துர்நாற்றம் வருகின்றது. தூய்மை பணியாளர்கள் தேங்கியுள்ள குப்பைகளை எரிய வைப்பதால், புகை மூட்டமாகி, பல்வேறு வியாதிகள் பரவுவதற்கு காரணமாகின்றது. பழுதடைந்துள்ள இயந்திரத்தை சீரமைத்து , குப்பைகளை தரம் பிரிப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Similar News