முந்திரி ஆலையில் மதக் கூட்டம் திடீர் முற்றுகை போராரட்டம் 

மார்த்தாண்டம்;

Update: 2025-03-17 12:18 GMT
குமரி மாவட்டம் உண்ணாமலைக்கடை பகுதியான கோட்டகத்தில் தனியாருக்கு சொந்தமான பழைய முந்திரி தொழிசாலை உள்ளது. தற்போது முந்திரி தொழிற்சாலையை அப்பகுதியினர் மத கூடமாக மாற்றி திடீர் சர்ச்சாக மாற்றி அமைக்க முயற்ச்சித்தனர். இந்தகவல் அறிந்த இந்து முன்னணி கிள்ளியூர் ஒன்றிய பொதுச் செயலாளர் செல்வின்  மற்றும் கட்சி நிரிவாகிகள் பொதுமக்கள் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.        இத்தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் வருகை தந்து ஜெபக்கூட்டம் நடத்த முயற்சி செய்தவர்களை கலைந்து செல்ல கூறினர். அவர்கள் கலைந்துசெல்லாாமல் அந்த பகுதியில் இருந்தனர். உடனடியாக இந்து முன்னனி செல்வின் தலைமையில் திடீர் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.        இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் முகுந்தன், வினுகுமார், செந்தில்குமார் தனிஷ் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியது. போலீசார் இரண்டு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பகுதியில் ஜெபக் கூட்டம் நடத்த மாட்டோம் என எழுதி வாங்கினர். இதனை அடுத்து அந்த பகுதியில் இருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Similar News