ரயில்வே சாலையில் பைக்கில் செல்ல அனுமதி 

இரணியல்;

Update: 2025-03-17 12:25 GMT
கன்னியாகுமரி -  திருவனந்தபுரம் இரட்டை  ரயில் பாதை பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன. இதில் இரணியல் பகுதியில் இருந்து தக்கலை செல்லும் சாலை முழுவதுமாக மூடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த ரயில்வே பாலப் பணி ஓரளவு முடிவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து ஜல்லிகள் பரப்பி தண்டவாள பணிகள் நடக்க உள்ளன.        தற்போது மேம்பால பணிகள் முடிவடைந்துள்ளதால் கீழே மாநில நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தார்கள்.        இந்த நிலையில் முழுவதுமாக பணிகள் முடிவடையாததால் வாகன ஓட்டுநர் நலன் கருதி பைக்குகள்  மட்டும் செல்ல அனுமதி வழங்க ரயில்வே நிர்வாக முடிவு செய்தது.       இதன்படி நேற்று 16ஆம் தேதி முதல் பைக்குகள் இரணியல் தக்கலை நெடுஞ்சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. இதனால் இப்போது நிலவி வந்த போக்குவரத்து நெருக்கடி ஓரளவு குறையும் என கூறப்படுகிறது.

Similar News