விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு!
சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுக்கா பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சக்தி விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.