தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு, வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் வழங்கி ஆறுதல் கூறினார்.
பெரியம்மாபாளையம் கிராமத்தில், பெரியசாமி,கருப்பாயி,சடையன் உள்ளிட்ட 4 பேர் வீடுகள் மின் கசிவால் திடீரென தீப்பற்றி எரிந்துவிட்டது. சென்னையில் சட்டசபை கூட்டத்தொடர் இன்று மதியம் முடிந்ததும்,திமுக கழகத்தின் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டது.;
பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி! வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம்! பெரியம்மாபாளையம் கிராமத்தில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை பார்வையிட்டு, வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரண உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் வழங்கி ஆறுதல் கூறினார். பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியம், பெரியம்மாபாளையம் கிராமத்தில், பெரியசாமி, கருப்பாயி, சடையன் உள்ளிட்ட 4 பேர் வீடுகள் மின் கசிவால் திடீரென தீப்பற்றி எரிந்துவிட்டது. சென்னையில் சட்டசபை கூட்டத்தொடர் இன்று மதியம் முடிந்ததும், பெரம்பலூர் விரைந்து வந்த சட்டமன்ற உறுப்பினர் எம் பிரபாகரன், கழக துணை பொதுச் செயலாளர்- மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா.எம்.பி., சார்பில் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகையாக, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார் .மேலும் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் தனது சொந்த செலவில் தலா ஒரு சிப்பம் அரிசி, காய்கறிகள், மளிகைப்பொருட்கள், வேஷ்டி,சேலை,போர்வை,பாய்,தலையணை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கி, ஆறுதல் கூறினார். இதில் வேப்பந்தட்டை வட்டாட்சியர் மாயகிருஷ்ணன், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் எஸ்.நல்லதம்பி, வேப்பந்தட்டை ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் க.ராமலிங்கம், வேப்பந்தட்டை ஒன்றிய துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பரமசிவம் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உடனிருந்தனர்.