ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் குடும்பத்தினர் இஃப்தார் நிகழ்வு

இஸ்லாமிய வழிபாட்டிற்கு பிறகு ஆல்மைட்டி குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் அனைவரும் பங்கு கொள்ள விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது;

Update: 2025-03-17 18:31 GMT
  • whatsapp icon
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் ,ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் குடும்பத்தினர், 17 . 03 .2025 திங்கட்கிழமை மாலை 6 மணி அளவில், இஃப்தார் நிகழ்ச்சிக்கு, ஏற்பாடு செய்திருந்தார்கள் விழாவில் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளியின் சேர்மன். டாக்டர் .A. ராம்குமார் தலைமை ஏற்றார்கள் . பள்ளியின் முதல்வர்கள் சாரதா சந்திரோதயம் ,துணை முதல்வர் . ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்கள். பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் செயலாளர் அப்துல் சலாம் பைஜி ஆல்மைட்டி குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்ச்சிக்கு வருகை தந்து ,ரம்ஜான் சிறப்பு பற்றியும் ,பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் பற்றியும் ,சிறப்புரை ஆற்றினார்கள். சிறுவாச்சூர் பள்ளிவாசல்,குலாம் அஹமது ,நோன்பு இருப்பதன் சிறப்பு பற்றி விரிவாக உரையாற்றினார்கள். ஆல்மைட்டி பள்ளியில் பயிலும் இஸ்லாமிய குழந்தைகளின் பெற்றோர்களும், குடும்பத்தாரும்,திரளாக கலந்து கொண்டார்கள். பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் பங்கேற்றார்கள். இஸ்லாமிய வழிபாட்டிற்கு பிறகு ஆல்மைட்டி குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் அனைவரும் பங்கு கொள்ள விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது

Similar News