பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்திய தம்பதியினர் கைது
திண்டுக்கல் அருகே VAO, சர்வேயர் ஆகியோரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்திய தம்பதியினர் கைது;

திண்டுக்கல், வக்கம்பட்டி VAO மற்றும் சர்வேயர் உள்ளிட்ட 2 பேர் வக்கம்பட்டி பகுதியில் தனிப்பட்டா வழங்க நாதன் என்பவர் அளித்த மனுவின் பேரில் அப்பகுதியில் அந்த இடத்தை பார்வையிட்டபோது அதே பகுதியை சேர்ந்த செல்வி மற்றும் அவரது கணவர் மெசியா ஆகிய இருவரும் பணியை செய்ய விடாமல் தடுத்து கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டதாக ஆத்தூர் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு 2 பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.