பட்டாகத்தியுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது
திண்டுக்கல்லில் பட்டாகத்தியுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது;

திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்புஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சவேரியார்பாளையம் பகுதியில் உள்ள முட்புதரில் பட்டாகத்தியுடன் பதுங்கி இருந்த அதே பகுதியை சேர்ந்த சகாயராஜ் மகன் அஜய்குமார்(27) என்பவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தார் போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டு அஜய்குமாரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.