கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் அளிப்பு
நிலக்கோட்டையில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் அளிப்பு;

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தமிழக அரசு சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திமுக மேற்கு ஒன்றியச் செயலா் கேகேபி.கரிகாலபாண்டியன் தலைமை வகித்தாா். நகரச் செயலா் ஜோசப் பிள்ளை, ஒருங்கிணைந்த மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் பூங்கொடி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட வட்டார அலுவலா் விஷ்ணுபிரியா ஆகியோா் முன்னிலை வகித்தனா். பின்னா், 100 கா்ப்பிணிகளுக்கு ஊட்டசத்துப் பெட்டகங்கள், சீா்வரிசைப் பொருள்களை ஒன்றியச் செயலா் வழங்கினாா். தொடா்ந்து, கா்ப்பிணிகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இதில் திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.