ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து சரிவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 500 கன அடியாக நீர் வரத்து சரிவு;
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதி ஊராட்சி அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தளம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த வாரம் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒகேனக்கல் வனப்பகுதி மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பொழிந்த கனமழையின் காரணமாக நீர்வரத்து 1500 கன அடியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது மழையின் அளவு குறைந்ததை அடுத்து நாளுக்கு நாள் நீர்வரத்து சரிந்து காணப்படுகிறது. நேற்று வினாடிக்கு 700 கன அடியாக நீர்வரத்து இன்று மார்ச் 18 காலை 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 500 கன அடியாக சரிந்துள்ளது கோடை காலம் அதிகம் உள்ளது அடுத்து நீர்வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.