போச்சம்பள்ளி அருகே வாலிபார் தூக்கிட்டு தற்கொலை.
போச்சம்பள்ளி அருகே வாலிபார் தூக்கிட்டு தற்கொலை.;

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தேவீரஅள்ளி அடுத்த தண்ணீர்பாறை கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவருடை மகன் தனுஷ்குமார் (21) இவர் சுகாதார ஆய்வாளர் படிப்பு முடித்து திருப்பத்தூர் மாவட்டம் மாதனூரில் உள்ள கால்நடை டாக்டர் ஒருவரிடம் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் ஊருக்கு வந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்து வந்த பாரூர் போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.