கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது
மொரப்பூர் அருகே அரை கிலோ கஞ்சா வைத்திருந்த மூன்று பேர் கைது செய்து சிறையில் அடைப்பு;

தர்மபுரி மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியதின் பேரில் மொரப்பூர் காவலர்கள் நேற்று மாலை ரோந்து சென்ற போது சென்னம்பட்டி பிரிவு அருகே காவலர்களைக் கண்டதும் அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் பரையப்பட்டி கிராமத்தை சேர்ந்த வசந்தகுமார் கல்லூரி மாணவர்கள் ராமனேஷ், லக்னீஷ் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அவர்களிடமிருந்து 20,000 ரூபாய் மதிப்புள்ள அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவலர்கள் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.