
மணலுார்பேட்டை மஸ்ஜிதே நுார் பள்ளிவாசலில் நடந்த இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டார். மணலுார்பேட்டை மஸ்ஜிதே நுார் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.ஜமாத் தலைவர் சையத் அலி வரவேற்றார். வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நோன்பு சிறப்புகள் மற்றும் சமூக நல்லிணக்கம் குறித்து பேசினார். நகர செயலாளர் ஜெய்கணேஷ், காங்., மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், ஜமாத் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.