பட்டதாரி வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

தற்கொலை;

Update: 2025-03-18 03:51 GMT
பட்டதாரி வாலிபர் துாக்கிட்டு தற்கொலை
  • whatsapp icon
அரகண்டநல்லுார் அடுத்த வி.புத்துாரை சேர்ந்தவர் ராமதாஸ் மகன் அய்யப்பன், 21; பி.எஸ்சி., பட்டதாரி. சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், திருவிழாவிற்கு ஊருக்கு வந்த இவர், பெற்றோர்களிடம் பைக் வாங்கி தருமாறு கேட்டுள்ளார்.இதனால், பெற்றோர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. மனமுடைந்த அவர், நேற்று வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அரகண்டநல்லுார் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது மற்றும் போலீசார், அய்யப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News