
திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.அறங்காவல் குழு தலைவர் ஜெய்சங்கர், உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ரேவதி முன்னிலை வகித்தனர். இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் புருஷோத்தமன், திருக்கோவிலுார் செயல் அலுவலர் பாக்கியராஜ் தலைமையில், கோவில் எழுத்தர் நரேஷ்குமார் மற்றும் பக்தர்கள் இணைந்து உண்டியலை திறந்து காணிக்கையை எண்ணினர். இதில் ரூ. ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 400 ரூபாய் மற்றும் 13 கிராம் தங்கம், 72 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.