வேலை வாங்கி தருவதாக மோசடி தம்பதி மீது வழக்கு

10.30 லட்சம் மோசடி;

Update: 2025-03-18 05:37 GMT
வேலை வாங்கி தருவதாக மோசடி தம்பதி மீது வழக்கு
  • whatsapp icon
குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜெயினுல் ஆப்தின் (61) இவருக்கும் திருப்பத்தூர் மாவட்டம் நட்டாராம்பள்ளி பகுதியை சேர்ந்த பாண்டியன் (42) என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாண்டியன் அவரது மனைவி சகாயராணி ஆகியோர் ஜெயினுல் ஆப்தினை தொடர்பு கொண்டு துபாயில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி உள்ளனர். இதனை நம்பிய ஜெயினுல் ஆப்தின் தான் உட்பட ஆறு பேரை துபாய்க்கு அனுப்ப கடந்த 29. 10 .2022-ல்  ரூ. 10 .30 லட்சத்தை பாண்டியன் மற்றும் மனைவி சகாயராணியிடம் வழங்கி உள்ளனர்.        ஆனார்  வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் வேலைக்கான ஆவணங்களாக சிலவற்றை கொடுத்தனர். பரிசோதித்து பார்த்த போது அது போலி என்று தெரியவந்தது. இதையடுத்து ஜெயினுல் ஆப்தின் பண மோசடி குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் பண மோசடி செய்ததாக பாண்டியன். சகாயராணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News