மனநலம் பாதிக்கப்பட்ட பாட்டியை அடித்துக் கொன்ற சரித்திர பதிவேடு குற்றவாளி

மனநலம் பாதிக்கப்பட்ட பாட்டியை சுத்தியால் அடித்துக் கொன்ற சரித்திர பதிவேடு குற்றவாளி;

Update: 2025-03-18 05:43 GMT
  • whatsapp icon
திருவள்ளூர் அத்திப்பட்டு புது நகர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பாட்டியை சுத்தியால் அடித்துக் கொன்ற சரித்திர பதிவேடு குற்றவாளி. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் வசிப்பவர் கருப்பையா இவரின் மகன் பெயர் பத்மநாதன் வயது 23 பத்மநாபன் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார். இந்த நிலையில் இவரின் தாயாரின் அம்மாவான சரஸ்வதி வயது 85 என்பவர் இவர்களின் வீட்டின் முன்பு உள்ள ஒரு சிறிய அறையில் இருந்துள்ளார். சரஸ்வதி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அவரை சங்கிலியால் தான் வீட்டில் கட்டி வைப்பர் என்றும் சில சமயம் சரஸ்வதி சங்கிலியை அவிழ்த்துக்கொண்டு வெளியே சென்று விடுவார் அப்படி போகும் போது அவரை மீண்டும் அழைத்து வந்து சங்கிலியில் கட்டிவைப்பர். அதுபோன்ற நிலையில் இன்று மீண்டும் சரஸ்வதி பாட்டி வெளியில் சென்றதாக தெரிகிறது எப்போதும் பாட்டிக்கு பத்மநாபன் தான் உணவு வாங்கி வந்து கொடுப்பார் இந்த முறை அவர் போதையில் இருந்ததால் பாட்டி வெளியே சென்றது அவருக்கு பிடிக்காமல் சுத்தியால் தன் பாட்டி சரஸ்வதியை தலையில் அடித்து கொன்றதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது. மேலும் போதையில் இருந்த பத்மநாபனை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடலை கைப்பற்றிய போலீசார உடல் கூறு ஆய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ பணிக்கு அனுப்பி வைத்து கொலை சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News