
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் செண்பகராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஆதிச்சன்புதூர் குளத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுப்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை பராமரிப்பில் உள்ள ஏரி குளங்களில் விவசாய நிலத்தை மேம்படுத்துதல், மண்பாண்டங்கள் செய்தல் மற்றும் இதர பயன்பாட்டிற்கு மண் எடுக்க தகுதி வாய்ந்த ஏரி, குளங்கள் கண்டறியப்பட்டு அவற்றில் இலவசமாக மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் செண்பகராமன்புதூர் பகுதியில் அமைந்துள்ள ஆதிச்சன்புதூர் குளத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வண்டல் மண் எடுக்கப்படுவது நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு, மண் உரிய அளவில் மட்டும் எடுத்து பயன்படுத்துமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. என கூறினார். நடைபெற்ற ஆய்வில் தோவாளை வட்டாட்சியர் கோலப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.