
குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற 70 வயதான முதிர்ந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், காவல்துறையில் இறப்பு ஏற்படும் போது ரூபாய் 150 பிடித்தம் செய்து ரூபாய் 50,000 வழங்கப்படுவதை 2 லட்சமாக உயர்த்த வேண்டும், குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் துறையினருக்கு மற்ற துறைக்கு அலுவலகம் வைக்க அரசு நிலம் மற்றும் கட்டிடம் வழங்குவது போல் குமரி மாவட்டம் காவல்துறையினருக்கும் வழங்க வேண்டும், காவல்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும், அதற்கு தனி அமைச்சர் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கன்னியாகுமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவலர் நல சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் பென்சிகர் தலைமை வகித்தார். செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் முருகேசன் மற்றும் சட்ட ஆலோசகர் மரிய ஸ்டீபன் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.