
குமரி மாவட்டம் இறச்சகுளம் பகுதியை சேர்ந்தவர் பகவதியப்பன் மகன் சக்திவேல் (24) இவர் நாகர்கோவில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது சக்திவேல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவில் வீட்டுக்கு வந்த பெற்றோர் மகன் தூக்கில் தூங்குவதைப் பார்த்து கதறினர். இது குறித்து தகவல் அறிந்து பூதப்பாண்டி போலீசார் சக்திவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சக்திவேல் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.