திருவள்ளூரில் திருவிழா போல கோலாகலமாக நடந்து முடிந்த புத்தகத் திருவிழா
திருவள்ளூரில் திருவிழா போல கோலாகலமாக நடந்து முடிந்த புத்தகத் திருவிழா;
திருவள்ளூரில் கடந்த 7-ஆம் தேதி புத்தக கண்காட்சி சி.வி நாயுடு சாலையில் பொருட்காட்சி திடலில் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் தலைமையில் நூலக ஆணைக் குழு தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் திருவள்ளூர் மாவட்டம் நிர்வாகத்துடன் இணைந்து நடத்திய புத்தகக் கண்காட்சியில் 108 அரங்கங்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்பாளர்களின் முயற்சியில் உருவான ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன இதில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று புத்தகங்களை வாங்கி பயனடைந்தனர் மேலும் தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள் கவிஞர்கள் பதிப்பாளர்கள் மேடைப் பேச்சாளர்கள் அறிஞர் பெருமக்கள் தொல்லியல் ஆய்வாளர்கள் தொலைக்காட்சி நெறியாளர்கள் ஆசிரியப் பெருமக்கள் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர் இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க செயலாளர் எஸ்கே முருகன் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் பங்கேற்றனர் இந்நிகழ்வில் எழுத்தாளர் செங்கதிர் சண்முகம் அவர்களை கவிஞர் வைரமுத்து பாராட்டி பரிசளித்து கௌரவித்தார் திருவள்ளூரில் கடந்த 11 நாட்கள் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் 50 ஆயிரம் மாணவர்கள் வருகை தந்து லட்சக்கணக்கான வாசகர்களும் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய கவிஞர் வைரமுத்து மும்மொழிக் கொள்கை எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது என்பது தான் என் கருத்து ஆனால் இருமொழிக் கொள்கை என்பது இந்தியாவுக்கே பொருந்தும் என்பது என் கருத்து ஏனென்றால் இரு மொழி கொள்கை என்றால் எல்லா தேசிய இனங்களின் தாய் மொழியும் காப்பாற்றப்படும் பிறகு உலகத்தோடு உறவு கொள்ள ஆங்கிலம் என்னும் துணை மொழியும் பாதுகாக்கப்படும் எனவே இந்த இரண்டு மொழிகளையும் கற்றுக் கொண்டால் இந்தியாவுக்கே பொருத்தமான ஒரு மொழி கல்வியாக அது இருக்கும் மும்மொழி கொள்கை என்பது சிலருக்கு பாதிப்பு பலருக்கும் பாதிப்பு என்பதாக முடியும் அருமை அமைச்சர் முன்னாள் அமைச்சர் சிதம்பரம் அவர்கள் சொல்வது போல் வட இந்தியாவில் ஒரு மொழிக் கொள்கைதான் இருக்கிறது தவிர உன் மொழிக் கொள்கை இல்லை இரு மொழிக் கொள்கை இல்லை தாய் மொழியில் மட்டுமே அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் தமிழர்கள் தாய்மொழியோடு ஆங்கிலத்தையும் படிப்பதால் உலகத்தை ஆளுகிறார்கள் ஒரு சின்ன ஓட்டை ஒரு பெரிய ஓட்டை இரண்டின் வழியாக சின்ன கூழையும் போய்விடும் மிகப்பெரிய கூழையும் போய்விடும் என்பது போல தாய் மொழியாகிய தமிழ் துளை மொழியாகிய ஆங்கிலம் இந்த ரெண்டு துளை வழியாக ஒட்டுமொத்த மனித சமூகமே பயணப்படும் என்பது என் எண்ணம் எனவே தாய் மொழியின் கருத்துக்களை தாய் மொழியின் பெருமைகளை உயர்த்தி பிடிப்பதற்கு இரு மொழிக் கொள்கைதான் இயல்பானது ஏதுவானது வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாரதியார் புகழப்பட்ட திருக்குறள் தான் சென்று சேர வேண்டிய தூரத்தை இன்னும் அடையவில்லை என்பது எங்கள் கருத்து அந்த கருத்தை சரி செய்யும் விதமாக அந்த கருத்துக்கு இன்னும் ஊட்டும் சேர்க்கும் விதமாக முதலமைச்சரவர்கள் திருக்குறளை பல மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு ஆணையிட்டு இருக்கிறார் நிதி ஒதுக்கி இருக்கிறார் இது திருவள்ளுவருக்கு பெருமை என்பதைவிட தமிழ் இனத்துக்கும் தமிழ் மொழிக்கும் பெருமை என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்றார்.